முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவசர கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. எதிர்கால அரசியல் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பகல் விசேட கூட்டமொன்றை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.